
இவ்வாய்வு, நபி முஹம்மது (ஸல்) அவர்களின் கற்பித்தல் முறைகளைப் பன்முகமாக ஆராய்ந்து, அவற்றின் தனித்துவம், செயல்திறன், நவீனக் கல்வியியல் கோட்பாடுகளுடனான இணைப்பாட்டை விளக்குகிறது. திருக்குர்ஆன், ஹதீஸ், சீறத் இலக்கியங்கள் போன்ற முதன்மை ஆதாரங்களின் அடிப்படையில், கதை சொல்லல், வினா–விடை முறை, செயல் விளக்கக் கற்பித்தல், தனிப்பட்ட அணுகுமுறை, படிநிலை வழிகாட்டல் போன்ற முக்கியமான கற்பித்தல் உத்திகள் அடையாளம் காணப்படுகின்றன. எளிமை, ஆழம், நடைமுறைப் பயன்பாடு ஆகிய அம்சங்களால் சிறப்பான இம்முறைகள், அறிவு பரவலிலும் கற்றலின் நிலைத்தன்மையிலும் குறிப்பிடத் தக்க பங்கு வகித்தன. ஆய்வின் முதன்மை நோக்கம், நபி (ஸல்) அவர்களின் கற்பித்தல் எண்ணக்கருக்களை நவீனக் கல்வியியல் அணுகுமுறைகளுடன் ஒப்பிட்டு அவற்றின் கோட்பாட்டுத் தொடர்பை வெளிப்படுத்துவதாகும். குறிப்பாக, மாணவர் மையக் கற்றல், ஆக்கபூர்வ கற்றல், தனிப்பயனாக்கப்பட்ட கற்றல், சமூக–உளவியல் சார்ந்த கற்றல் போன்ற இன்றைய கல்வி கோட்பாடுகளுடன் நபியவர்களின் கற்பித்தல் உத்திகள் குறிப்பிடத் தக்க வகையில் ஒத்திசைவாக உள்ளன என்பது இவ்வாய்வின் முக்கியக் கண்டறிதலாகும். மேலும், இம்முறைகள் அறிவாற்றல் வளர்ச்சி, சிந்தனைத் திறன் மேம்பாடு, நல்லொழுக்க வடிவமைப்பு, சமூக ஒற்றுமை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் கல்வித் தத்துவங்களாக வெளிப்படுகின்றன. ஆகையால், இக்கற்பித்தல் அணுகுமுறைகள், சமகால ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பாடத்திட்ட வடிவமைப்பாளர்கள், கல்விக் கொள்கை உருவாக்குபவர்கள் ஆகியோருக்கு நடைமுறை வழிகாட்டுதல்களை வழங்கக்கூடியவை. மேலும், மாணவர் ஈடுபாட்டை மேம்படுத்தும், கற்றல் சூழலை மனிதநேயமாக மாற்றும், தனிநபர்–சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நிலையான கல்வி வடிவமைப்புகளுக்கு இவை வலு சேர்க்கின்றன. This study offers an in-depth examination of the teaching methods of Prophet Muhammad (PBUH), emphasizing their distinctiveness, pedagogical effectiveness, and relevance to contemporary educational theory. Drawing upon primary sources such as the Qur’an, Hadith, and Seerah literature, the study identifies key instructional strategies, including storytelling, question–answer interaction, demonstrative teaching, personalized guidance, and a gradual, stepwise instructional approach. Characterized by clarity, depth, and practical applicability, these methods significantly contributed to the dissemination, retention, and internalization of knowledge. The principal aim of the study is to situate the Prophet’s pedagogical approaches within the framework of modern educational paradigms. The analysis reveals substantial alignment with contemporary models such as student-centered learning, constructivist learning, personalized education, and socio-psychological learning frameworks. Findings further indicate that the Prophet’s methods not only fostered cognitive development and intellectual refinement, but also strengthened moral character, social cohesion, and holistic personal growth. Accordingly, these pedagogical principles hold enduring value for modern educators, curriculum specialists, and policymakers. They provide practical guidance for designing learning environments that enhance student engagement, integrate ethical and social dimensions of learning, and support both individual advancement and broader community development.
நவீனக் கல்வியியல், கற்பித்தல், நபி முஹம்மது (ஸல்), கற்பித்தல் முறைகள், கல்வி நுட்பங்கள்
நவீனக் கல்வியியல், கற்பித்தல், நபி முஹம்மது (ஸல்), கற்பித்தல் முறைகள், கல்வி நுட்பங்கள்
| selected citations These citations are derived from selected sources. This is an alternative to the "Influence" indicator, which also reflects the overall/total impact of an article in the research community at large, based on the underlying citation network (diachronically). | 0 | |
| popularity This indicator reflects the "current" impact/attention (the "hype") of an article in the research community at large, based on the underlying citation network. | Average | |
| influence This indicator reflects the overall/total impact of an article in the research community at large, based on the underlying citation network (diachronically). | Average | |
| impulse This indicator reflects the initial momentum of an article directly after its publication, based on the underlying citation network. | Average |
