Powered by OpenAIRE graph
Found an issue? Give us feedback
image/svg+xml art designer at PLoS, modified by Wikipedia users Nina, Beao, JakobVoss, and AnonMoos Open Access logo, converted into svg, designed by PLoS. This version with transparent background. http://commons.wikimedia.org/wiki/File:Open_Access_logo_PLoS_white.svg art designer at PLoS, modified by Wikipedia users Nina, Beao, JakobVoss, and AnonMoos http://www.plos.org/ ZENODOarrow_drop_down
image/svg+xml art designer at PLoS, modified by Wikipedia users Nina, Beao, JakobVoss, and AnonMoos Open Access logo, converted into svg, designed by PLoS. This version with transparent background. http://commons.wikimedia.org/wiki/File:Open_Access_logo_PLoS_white.svg art designer at PLoS, modified by Wikipedia users Nina, Beao, JakobVoss, and AnonMoos http://www.plos.org/
ZENODO
Article
Data sources: ZENODO
addClaim

எஸ். ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் நாவலில் உளவியல் கூறுகள்

Authors: shanlax;

எஸ். ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் நாவலில் உளவியல் கூறுகள்

Abstract

எஸ். ராமகிருஷ்ணனின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற சஞ்சாரம் நாவலில் அதிக கிளைக்கதைகளும், புனைக் கதைகளும் இடம் பெற்றுள்ளன. நாவலை ஆசிரியர் கரிசல் மண் நாதஸ்வர இசைக்கலைஞர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு படைத்துள்ளார். அவற்றுள் ஒன்று, மூதாட்டி கொண்டம்மாள் தன் ஊரில் திருட வந்த திருடனுக்கு கொடுத்த தண்டனை விசித்திரமாகவும், அதே நேரத்தில் அவன் மனம் திருந்தும்படியும் அமைந்துள்ளது. அத்தண்டனையானது தீர்ப்பாக அல்லாமல் தீர்வாக அமைந்தது. பக்தி இலக்கியம் மற்றும் நீதிஇலக்கியம் அறத்தின் பயனை எடுத்துக்கூறி அறத்தின் வழியைத் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. அவை குற்றங்களைத் தடுத்தும், குறைத்தும் வருகின்றன. இருப்பினும், மனித மனதில் சில நொடிகளில் உணர்ச்சி வேகத்தில், சூழ்நிலையாலும், வறுமையாலும், தவறிழைத்தவர்களுக்கு மனம் திருந்துவதற்கு நல்வாய்ப்பாக அமைகின்றன. பிழைகள், தவறுகள், குற்றங்கள் தொடர்ந்து கொண்டே உள்ள நிலையில் குற்றவாளிகளுக்குக் கொடுக்கும் தண்டனை அவனை தண்டிப்பதாக மட்டும் அல்லாமல், செய்த தவறுக்காக மனம் திருந்துவதாகவும் அமைதல் வேண்டும். இந்நாவலில் இடம் பெறும் திருடனின் செயல்அவன் தன்குடும்பத்தின் வறுமையைப் போக்கவும், மூன்று வேளை உணவை தன் பிள்ளைகளுக்குக் கொடுக்கவும், வேறு வழியறியாத திருட வருகிறான். திருட வந்த இடத்தில் மாட்டிக்கொண்ட அவனுக்குக் கொடுத்த தண்டனை, அதனால் அவன் மனம் அடைந்த மாற்றம் ஆகியவற்றை இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.

Powered by OpenAIRE graph
Found an issue? Give us feedback