
நாவலில் நவீனத்துவம் என்பது கதையின் அமைப்பு கதாப்பாத்திரங்களின் சித்திரிப்பு மற்றும் கருப்பொருள்களில் வெளிப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டு சென்னையை கதைக்களமாகக் கொண்டு இந்நாவல் சமகால மனிதர்களின் உளவியல் சிக்கல்கள் அவர்களின் ஆசைகள் ஏக்கங்கள் குறித்து வெளிப்படுத்துகின்றது. புனைவுக்கும் உண்மைக்கும் இடையேயான எல்லையை உடைத்து எதார்த்தத்தையும் கலந்து அமைந்துள்ள விதத்தில் நவீனத்துவம் வெளிப்படுகிறது.
