
ஆய்வுச்சுருக்கம் எழுத்தாளன் மறைந்தாலும் எழுத்துக்கள் மறைவதில்லை என்பதற்கு வெள்ளியங்காட்டான் ஆகச் சிறந்த சான்று. இராமசாமி எனும் இயற்பெயர் கொண்ட இவர் தாம் பிறந்த ஊரான வெள்ளியங்காடு எனும் பெயரை வெள்ளியங்காட்டான் என மாற்றித் தம் பெயராக ஆக்கிக் கொண்டர். தனது வாழ்வின் இறுதிக்காலம் வரையிலும் ஒரு எழுத்தாளனாய் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துத் தடம் புரளாமல் நேர்மையாக வாழ்ந்துள்ளார். கொடிய வறுமையிலும் நெறி தவறாது தம் பிள்ளைகளை வளர்த்தது மட்டுமின்றி, தமிழ்ச் சமூகத்திற்குப் பல படைப்புகளைக் கொடுத்துள்ளார். யாராலும் கண்டு கொள்ளாத கவனிக்கப்படாத சிறந்த ஆளுமையாய்த் திகழ்ந்த இவர், தாம் உயிரோடு வாழ்ந்த காலங்களில் தனது பிள்ளைகளுக்குத் தனது வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்களை ஒவ்வொன்றாக 38 கடிதங்களாக எழுதியுள்ளார். அவற்றைச் சேகரித்து அவரது மகள் நளினி என்பவர் நூலாக வெளியிட்டுள்ளார். தொகுக்கப்பட்ட கடிதங்களில் காணலாகும் வெள்ளியங்காட்டனின் வாழ்வியலை விளக்கி எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது. ABSTRACT Velliyankattan is the best example that even if the writer passes away, his creations do not disappear. His birth name was Ramasamy, but he changed his name as Velliyankattan after his native town Velliyankadu. Even towards the end of his life, though he faced various crises as a writer, he lived an honest life. He not only brought up his children in extreme poverty but also gave many works to the Tamil community. He is an outstanding personality who was not noticed by anyone. He has written the experiences of his lifetime to his children as 38 letters. His daughter Nalini has collected those letters and has published them as a book. The objective of this research article is based on explaining the life of Velliyankattan from those letters.
| selected citations These citations are derived from selected sources. This is an alternative to the "Influence" indicator, which also reflects the overall/total impact of an article in the research community at large, based on the underlying citation network (diachronically). | 0 | |
| popularity This indicator reflects the "current" impact/attention (the "hype") of an article in the research community at large, based on the underlying citation network. | Average | |
| influence This indicator reflects the overall/total impact of an article in the research community at large, based on the underlying citation network (diachronically). | Average | |
| impulse This indicator reflects the initial momentum of an article directly after its publication, based on the underlying citation network. | Average |
