Powered by OpenAIRE graph
Found an issue? Give us feedback
image/svg+xml art designer at PLoS, modified by Wikipedia users Nina, Beao, JakobVoss, and AnonMoos Open Access logo, converted into svg, designed by PLoS. This version with transparent background. http://commons.wikimedia.org/wiki/File:Open_Access_logo_PLoS_white.svg art designer at PLoS, modified by Wikipedia users Nina, Beao, JakobVoss, and AnonMoos http://www.plos.org/ ZENODOarrow_drop_down
image/svg+xml art designer at PLoS, modified by Wikipedia users Nina, Beao, JakobVoss, and AnonMoos Open Access logo, converted into svg, designed by PLoS. This version with transparent background. http://commons.wikimedia.org/wiki/File:Open_Access_logo_PLoS_white.svg art designer at PLoS, modified by Wikipedia users Nina, Beao, JakobVoss, and AnonMoos http://www.plos.org/
ZENODO
Article
Data sources: ZENODO
addClaim

இலக்கியங்கள் காட்டும் தமிழர்களின் அறிவியல் சிந்தனைகள்

Authors: shanlax;

இலக்கியங்கள் காட்டும் தமிழர்களின் அறிவியல் சிந்தனைகள்

Abstract

தமிழுக்கு அமுதென்று பேர். அமுதாகிய தமிழ் மொழியானது அறிவியல் சிந்தனைகளை கொடுக்கிறது. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்தகுடி. மலையும் வயல் சார்ந்த நிலமும் தோன்றுவதற்கு முன்பே காடுகளில் ஈட்டி வாள் போன்ற ஆயுதங்களுடன் வாழ்ந்த தமிழர்கள் அறிவியல் சிந்தனை உடையவர்களாகவும், அறிவியலுக்கும் தொழில்நுட்பத்திற்கும் வழிகாட்டிகளாகவும் திகழ்ந்தார்கள். இலக்கியங்கள் காட்டும் தமிழர்களின் அறிவியல் சிந்தனைகள் பற்றி இவண் காண்போம். · திருக்குறள் கூறும் அறிவியல் சிந்தனை அறிவற்றங் காக்கும்ங் கருவி செறுவாாக்கும் உள்ளழிக்க லாகா அரண். · கலைஞர் கருணாநிதி உரை பகையால் அழிவு வராமல் பாதுகாக்கும் அரண். அறிவு ஒன்று தான் · சாலமன் பாப்பையா உரை அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம் பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை. அறிவியல் என்றதுமே நம் நினைவுக்கு வருவது கண்ணாடி குடுவைகளும், நுட்பமான கருவிகள் கொண்ட ஆய்வுக் கூடங்களும், கணிப்பொறி போன்ற அறிவியல் கண்டுகிடிப்பு கருவிகளும் தான். ஆனால் ஆதிகாலத்தில் காடுகளில் வாழந்து கொண்டிருந்த மனிதன் தன் இரண்டு கால்களையும் ஊன்றி நடக்க தொடங்கிய அன்றைக்கே அறிவியல் அறிவும், அறிவியல் சிந்தனையும் தமிழர் சமுதாயத்தில் நிலவி வந்திருக்கிறது. அறிவியல் தமிழ் என்ற ஒரு பார்வை அண்மைக் காலத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. அதனுடைய நோக்கம் இலக்கியங்களில் மேலை நாட்டு அறிவியல் வல்லுனர்களின் கருதுகோள்களை காண முயற்சிப்பது அன்று ஆனால் அதே நேரத்தில் பல அறிஞர்களிடம் அறிவியல் கண்ணோட்டம் இருந்தது என்பதை உணர்த்தல் அறிவியல் செய்திகளைத் தமிழ் மொழியில் ஆக்கவும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Powered by OpenAIRE graph
Found an issue? Give us feedback